Monday 20 March 2017

சீமான் உண்மை முகம்

 

தமிழன் என்ற வலைதள முகவரியில், ‘முன்னாள் சீமான் ஆதரவாளர்(?)’ என்று சொல்லிக்கொள்ளும் முகம் காட்ட விரும்பாத ஒருவர் எழுதிய பதிவிற்கான எதிர்வினைதான் இக்கட்டுரை. பதில் எழுத வேண்டாம் என்றுதான் பலநாட்கள் இருந்தேன். ஆனால், சில வாட்சப் புரட்சியாளர்கள் நாம் தமிழர் கட்சிக்கும், சீமானுக்கும் எதிரான அந்தப் புளுகு மூட்டைகளை  எவ்விதக் குற்றஉணர்வும், துளியளவு அறவுணர்வும் இல்லாது தொடர்ந்து பரப்புகிறார்கள். அதனைத் தடுத்து நிறுத்த முடியாது என்றாலும், அதில் கூறியிருக்கும் செய்திகளின் உண்மைத்தன்மையை கேள்விக்குட்படுத்தலாம். ஆய்வுக்குள்ளாக்கலாம் என்று முனைவோருக்கான விடைதான் இக்கட்டுரை. எனக்கு தெரிந்த சீமான் தரப்பு நியாயங்களை தகுந்த ஆதாரத்தோடு அவர் வரிசைப்படுத்தியிருக்கும் தலைப்பின்படியே முன்வைத்திருக்கிறேன். இதனை முழுமையாகப் படியுங்கள். அந்த முகமில்லா ‘தமிழன்’ எழுதிய கட்டுரையில் எத்தனை பொய்யும், புரட்டும், வன்மமும் நிறைந்திருக்கிறது என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்.

சீமான்
 புலிகளுக்கு செய்த துரோகங்கள்:

2009ஆம் ஆண்டு மே மாதம், சிங்கள அரசாங்கத்தால் நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலைகளையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும் ஐநாவும், உலக நாடுகளும் கண்டுகொள்ளாத நிலையில்  நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்திடம் மனித உரிமை அமைப்புகளும், பல அரசுசாரா அமைப்புகளும் 2009 ஆம் ஆண்டு சூலை மாதத்திலிருந்து முறையிட்டனர். நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தனக்கு கிடைத்தத் தரவுகள், செய்திகளின் அடிப்படையில் நவம்பர் 19,2009 அன்று சமாதானப் பேச்சுவார்த்தை முறிவுக்கு பின்னரான காலக் கட்டம்’, ‘இறுதிப்போர்’, ‘குறிப்பாக இறுதி மாதங்களில் (ஏப்ரல், மே-2009) நடைபெற்றவை போன்றவைகளை விசாரிக்க ஒப்புக்கொண்டது. அதன்படி, அதற்கான பணிகளை தொடங்கிய தீர்ப்பாயமானது, 2010ஆம் ஆண்டு சனவரி 14 - 16 வரை தனது முதல் அமர்வை (விசாரணையை) அயர்லாந்து நாட்டின் டப்ளின் நகரில் நடத்தியது. அந்த அமர்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக புலிகளுக்கு எதிராக  41 பக்க அறிக்கையை சமர்பித்துள்ளனர் என்று தொடங்குகிறது முதல் குற்றச்சாட்டு.

டப்ளின் தீர்ப்பாயத்தில் விசாரணை நடந்தது, 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்;  நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டதோ அதற்கு 3 மாதங்களுக்கு பிறகு, மே 18, 2010 அன்று. நாம் தமிழர் கட்சி கட்சி தொடங்கும் முன்னரே டப்ளினில் கட்சி சார்பாக  புலிகளுக்கு எதிரான அறிக்கை சமர்ப்பித்ததாக கூறுவது என்ன வகையான குற்றச்சாட்டு?. அவர் குறிப்பிடும்  அந்த 41 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது மனித உரிமை ஆர்வலர் பால் நியூமேன். அங்கே அவர் அவ்வறிக்கையை சமர்ப்பிக்கும்போது நாம் தமிழர் கட்சி என்ற ஒன்றே தொடங்கப்படவில்லை அதற்குமுன் அமைப்பாக இருந்த நாம் தமிழர் இயக்கத்திலும் பால் நியூமேன் இல்லை. மே 17 இயக்கத்தோடுதான் அப்பொழுது பால் நியூமேன் இணைந்து செயல்பட்டார். அவர் அறிக்கை சமர்ப்பித்துவிட்டு இந்தியா வந்த பிறகு, மே 17 இயக்கம்  இதுதொடர்பாக நடத்திய டப்ளின் மக்கள் நீதிமன்றத்தில் நடந்த 'இலங்கை அரசின் போர்க்குற்றங்களின் விசாரணை மற்றும் இந்து-ராமின் பொய் மோசடி ஊடகப் பணிகள்'  என்ற கருத்தரங்கத்தில் கலந்துகொண்டு, தான் சமர்ப்பித்த அறிக்கையில் உள்ளவற்றைத் பேசியிருக்கிறார். (ஆதாரம் -https://goo.gl/wj2DeI).  இவர்கள் கூற்றின்படி, பால்நியூமென் சமர்ப்பித்த அறிக்கையில் தவறு இருக்கிறதென்றே வைத்துக்கொண்டாலும் அதற்கு விளக்கம் தர வேண்டியது பால் நியூமேன் அவர்களும் மே 17 இயக்கமும்தான். பால் நியூமேனாவது தான் யார், இதுவரை தான் செய்த வேலைகள், மனித உரிமை செயல்பாட்டாளராக சமர்பித்த தனது அறிக்கையை அறிக்கை குறித்து பல முறை விளக்கமளித்திருக்கிறார் (ஆதாரம்- https://www.youtube.com/watch?v=xoVd2pILrlY). மே17 இயக்கம் தான்  இன்றுவரை அதுகுறித்து அவர்கள் வாய்திறக்கவில்லை. நடந்தவைகள் இவ்வாறு இருக்கையில் அதற்கு எந்தவகையிலும் தொடர்பே  இல்லாத நாம் தமிழர் கட்சியை அந்த அறிக்கையோடு தொடர்புபடுத்துவது எவ்வகையில் ஏற்க இயலும்? என்பதை உங்களது முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

சீமானின் துரோகத்துக்கு  இரண்டு ஆதாரங்கள்:
மேற்கூறிய பொய்யான துரோகக் குற்றச்சாட்டு எனும் புரட்டுரைக்கு வலுசேர்ப்பதற்காக இரண்டு இணைப்புகளை கொடுத்திருக்கிறார்.

முதல் இணைப்பு,
மாணவர் அமைப்பு சீமானுக்கு தடை என்ற விகடன் செய்தி.
2010ல் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பானதுதான் இதுவும். 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் பால் நியூமேன் கலந்துகொள்ளும் ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பு என்ற பெயரில் கடிதம் ஒன்று முகநூலில் வெளியிடப்பட்டிருந்தது. எதையுமே புரிந்துகொள்ளாமல் அரைகுறையாக அணுகுகிற சில அதிமேதாவிகளும், ‘மாணவர் அமைப்பு என்ற பெயரில் உலவும் சில நிரந்தர மாணவர்களும் வழமை போல இதனையும் தனது அறிவுக்கண்(!) கொண்டு அணுகியதால் வந்ததே இவ்வறிவிப்பு. அது தொடர்பான செய்திதான் விகடனில் வந்தது. ஆனால், அதற்கு மாணவர்கள் மத்தியில் எந்த ஆதரவும் இல்லாததால் அப்புத்தக வெளியீட்டுவில் எவ்விதப் போராட்டமும்  நடைபெறவில்லை. இதனால், புத்தக வெளியீட்டு விழாவானது எவ்விதச் சலசலப்புக்கும் இடங்கொடாது மிக அமைதியான முறையில்  நடைபெற்றது. காசி ஆனந்தன், வெள்ளையன், வ.கௌதமன் ஆகியோர் மாணவர் அமைப்பின் எதிர்ப்பால்தான் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்தனர் என்றும் எழுதியிருக்கிறார். ஆனால், தாங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்காததற்கு  இதுதான் காரணம் என அவர்கள் எந்தவிடத்திலும் அறிவிக்கவில்லை. அதன்பிறகு, பல மேடைகளில் அவர்கள் மூவரும் சீமானோடு பங்கேற்றனர். அங்கும் இதைப்பற்றி அவர்கள் பேசவில்லை.  

இன்னொரு ஆதாரமாக
,  தேவர் சமுதாயத்து மக்கள் சீமானுக்கு எதிராக குற்றச்சாட்டு வைத்தார்கள் என்று ஒரு முகநூல் பக்க இணைப்பையும் கொடுத்திருக்கிறார்கள். அதில் சென்று பார்த்தால் அந்த கட்டுரையில் என்ன எழுதப்பட்டிருக்கிறதோ அது அப்படியே வார்த்தை மாறாமல் பதிவிடப்பட்டிருக்கிறது. தேவர் பிலிம்ஸ் என்ற URL கொண்ட  அந்த பக்கத்தில் ஆங்கிலப் படங்களை பதிவேற்றியிருக்கிறார்கள். அந்த பக்கத்திற்கும்  (ஆதாரம் - https://www.facebook.com/thevarvamsamfilmsindia/) தேவர் சமுதாயத்து மக்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. அதுவொன்றும் தேவர் சமூதாய மக்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கமும் அல்ல! மேலும், அந்தப்பக்கமானது விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர்கள் நடத்துகிற பக்கமாகும். அதற்குச் சான்றாக, விடுதலைப்புலிகளுக்கு எதிரான மிகக் கடுமையான அவதூறு பரப்புரைகள் அப்பக்கத்தில் இருப்பதைக் காணலாம். (ஆதாரம் - https://goo.gl/7pvb71).  இந்தப் பக்கத்தை வைத்திருப்பவரே புலிகள் எதிர்ப்பாளர் எனும்போது, சீமான் புலிகளுக்கு துரோகம் செய்கிறாரென்று பொங்க வேண்டிய அவசியமென்ன? சீமான் புலிகளுக்குத் துரோகம் செய்தாரென்றால், புலிகளின் எதிர்ப்பை மேற்கொள்ளும் அந்தப் பக்கத்தினர் சீமானை ஆதரிக்கவே செய்திருக்க வேண்டும். ஆனால், அதனைவிடுத்து அவர்கள் புலிகளையும் விமர்சிக்கிறார்கள். புலிகளுக்குத் துரோகம் செய்துவிட்டதாக சீமானையும் விமர்சிக்கிறார்கள். இதிலிருந்தே அவர்களின் உள்நோக்கத்தை அறிந்துகொள்ள முடியும். ஒரு சாதியை அடையாளமாகக் கொண்டு போலி முகநூல் கணக்கை உருவாக்கி, அதில் தனது கட்டுரையில் உள்ளதை அப்படியே போட்டுவிட்டு அதையே ஆதாரமாக கொடுப்பதில் உண்மைத்தமிழனின் உண்மை முகத்தை அறியலாம்.

சீமானின் இலங்கை பயண பொய்கள்:
சீமான் இலங்கை சென்றது படம் எடுப்பது குறித்து பயிற்சி அளிக்கதானாம். அதனை நடிகர் ராஜ்கிரணே விகடன் பேட்டியில் கூறிவிட்டார் என அங்கலாய்க்கிறார் கட்டுரையாளர். இந்தக் பொய்யுரையின் தொடக்கத்தில் ராஜ்கிரணைப் பற்றி ஒரு முன்னுரை வேறு! அவர் ஒழுக்கமானவர்; திரையுலகில் எந்த வம்பு தும்புக்கும் போகாதவர்;  சீமான் மேல் அவருக்கு எந்த மனக்கசப்புமில்லை என்று. எதற்காக இப்போது ராஜ்கிரண் அந்தாதி வாசிக்கிறார்கள் எனப் பார்த்தால் ராஜ்கிரண் மேல் நன்மதிப்பு வரச்செய்து, அவர் கூறினால் சரியாகத்தான் இருக்கும் என்ற மனநிலையை உருவாக்கவே இந்த யுக்தி. ராஜ்கிரண் தன் பணத்தையும், சொத்தையும் எப்படி இழந்தார்? எந்த வாய்ப்புமில்லாமல் போனதற்கு யாரோடு அவர் மோதினார்? அவரது தனிமனித ஒழுக்கம் என்ன?  என்பதெல்லாம் திரைத்துறையினருக்கு நன்றாகத் தெரியும். அதனை நாமும் பேசினால் 'பொய்த்தமிழனுக்கும் நமக்கு வேறுபாடு இல்லாது போய்விடும். அறம் கருதி அதனை தவிர்க்கிறேன்.

இப்போது செய்திக்குள் வருவோம்! சீமான் படம் எடுப்பதற்கு பயிற்சி அளிக்கத்தான் சென்றாரென்றால் தமிழகத்தில் எத்தனையோ அனுபவம் வாய்ந்த முதும்பெரும் இயக்குனர்கள் எல்லாம் இருக்கிறபோது அவர்களையெல்லாம் அழைக்காமல் சீமானை ஏன் அழைக்கவேண்டும்?  படமெடுக்கிற பயிற்சிதான் தேவையென்றால், ஏற்கனவே அங்கு சென்ற பாரதிராஜா, மகேந்திரனிடமே பயிற்சி அளிக்கச் சொல்லியிருப்பார்களே? பாரதிராஜாவையும், மகேந்திரனையும்விடவா சிறந்த பயிற்சியை சீமான் கொடுத்துவிடப் போகிறார்? என்ற கேள்விகளுக்குப் பதில் வராது. போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் சமயத்தில் தமிழகத்திலிருந்து ஒருவரை அழைத்து புலிகள் திரைப்படப்பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார்கள்? என்ன ஒரு அதிமேதாவித்தனம்! அதுசரி! புலிகள் சீமானை படமெடுக்கிற பயிற்சி அளிக்கத்தான் அழைத்தார்கள் என ராஜ்கிரணுக்கு எப்படி தெரியும்? எதனை வைத்துக் கண்டறிந்தார்? புலிகள் ராஜ்கிரணிடம் சொன்னார்களா? எதனை அடிப்படையாக வைத்து அதனைக் கூறுகிறார்? ஈழத்திற்கானப் போராட்டங்களை முன்னெடுத்த தமிழகத் தலைவர்கள்கூட இக்கருத்தை கூறவில்லையே, அவர்களுக்கு எல்லாம் தெரியாதது ராஜ்கிரணுக்கு எப்படி தெரிந்தது? விகடன் பேட்டியில் இதனைக் கூறிய ராஜ்கிரண் அதன்பிறகு அதுகுறித்து வேறு ஏதும் பேசவில்லையே ஏன்? ஈழப்போராட்டத்தோடு நேரடி தொடர்பு கொண்டிருந்த தலைவர்களில் ஒருவர்கூட ராஜ்கிரணின் கருத்தை ஏற்க வில்லையே ஏன்? இங்குள்ளவர்களை விட்டுவிடுவோம்! புலிகளோடு நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள், இயக்கத்திலிருந்தவர்கள், ஈழத் தமிழர்கள் போன்றோர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். அவர்களில் யாரும் ராஜ்கிரணின் கருத்தை வழிமொழியவில்லையே ஏன்?  அவர்களுக்கு எல்லாம் தெரியாதது ராஜ்கிரணுக்கு தெரிந்துவிட்டதா? இது எல்லாவற்றையும்கூட விட்டுவிடுவோம்.

முதலில்  ராஜ்கிரணுக்கும், ஈழப்போராட்டத்திற்குமான தொடர்பு என்ன?  திடீரென்று தன்னைப் புலிகளின் பிரதிநிதி போல சித்தரித்துக்கொண்டு, சீமானின் பயணத்தைப் பற்றி கருத்துகளை உதிர்த்துவிட்டு அமைதியாகிவிட வேண்டிய அவசியம் என்ன வந்தது?  தமிழக அரசியலில் தவிர்க்க முடியா அரசியல் பெரும்சக்தியாக உருவெடுத்துவரும் சீமானின் வளர்ச்சி சிலரது கண்ணை உறுத்துகிறது. அந்த உறுத்தல்தான் ராஜ்கிரணை இப்படி பேச வைத்திருக்கிறது. ஈழப்போராட்டத்திற்கோ அரசியலுக்கோ சம்பந்தமே இல்லாத ஒருவர் ஆதாரமாக வைத்துக்கொண்டு வாதிடும்போதே நாம் இவரது அரசியல் அறிவை(!) தெரிந்து கொள்ளலாம். இவருக்கும் ராஜ்கிரணுக்குக்கும் சேர்த்து நேரடி சவாலாக கூட இந்த கட்டுரை வாயிலாக வைக்கிறேன். ஈழப்போராட்டத்தில் எந்த அரசியலையும் சாராத நடுநிலையாக இருக்கும் யாராவது ராஜ்கிரண் சொன்னது உண்மைதான் என்று சொல்ல செய்தால் இந்த கட்டுரையை நான் அழித்துவிடுகிறேன்.

அடுத்தது போரின் இறுதிக்கட்டத்தில் யுத்தக் களத்திலிருந்து எல்லாளன் பட ஒளிப்பதிவாளர் சந்தோஷ் அவர்களிடம் சூசை அண்ணன், ‘சீமானை முன்னெடுக்கச் சொல்லுங்கள் என்று பேசியதை (ஆதாரம் -https://www.youtube.com/watch?v=DbCrv4I6MQs&t=7s) போலி ஆடியோ என்கிறார். அதை தயாரித்து யூடியூபில் வெளியிட்டது சீமான்தானாம். புலிகள் அதிகாரப்பூர்வமாக வானொலியில் தான் வெளியிடுவார்களாம். அதனால், இது போலியாம். அங்கே இறுதிக்கட்ட சண்டை நடந்துகொண்டிருக்கிறது மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்; அதை சொல்லிக்கொண்டு இருக்கிறார்; எல்லாம் அழிக்கப்பட்டுவிட்டது என்பதைச் சொல்லி சீமானை முன்னெடுக்கச் சொல்லுங்கள் என்கிறார். இதை அந்த நேரத்தில் எந்த வானொலியில் சொல்ல முடியும்?. இந்த குரலொலியை வெளியிட்டது சந்தோஷ்தான். இன்றும் சூசை அண்ணன் பேசிய குரல் பதிவை வெளியிட்ட சந்தோஷ் தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கான பெரிய ஊடகமொன்றில் செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார். இது பொய் என்றால், அவர் எப்பொழுதோ மறுத்திருப்பார். அந்த குரல் சூசை அண்ணனின் குரல் தான் என்பதை அவரின் மற்ற காணொளிகளை (ஆதாரம் - https://www.youtube.com/watch?v=w7pJTT0xndU) வைத்து ஒப்பிட்டு அறிந்துகொள்ளலாம். 

சீமானும், சிங்களர்களும்:
சீமான் பல காலமாக சிங்களர்களோடு நட்போடு  இருக்கிறாராம். அதனால்தான், தம்பி படத்தில் பூஜாவை நடிக்க வைத்தாராம். சிங்களரோடு நட்போடு இருக்கிறார் என்று சொல்வதற்கு எதுவுமே கிடைக்காததால் விரக்தியுற்ற கட்டுரையாளர் இறுதியாக பூஜாவை வைத்து படம் இயக்கியதைவிட வேறு காரணம் வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். சரி! இவர்கள் கூற்றுப்படி, சிங்களர்களுடன் இருந்த தொடர்பின் விளைவாகவே பூஜாவை வைத்து சீமான் படமெடுத்தார் என்றே வைத்துக் கொள்வோம். பூஜாவை வைத்து தம்பி படமெடுக்கப்பட்டது 2004-2005 காலக்கட்டத்தில். அதன்பிறகான ஆண்டுகளில்தான், ஈழத்திற்குச் சென்று தலைவர் பிரபாகரனை சந்தித்தார் சீமான். ஒருவேளை சிங்களர்களோடு சீமானுக்குத் தொடர்பிருந்தால் அவரை எப்படி தலைவர் பிரபாகரன் ஈழத்திற்கு அழைத்திருப்பார்? என்பதைக்கூட யோசிக்க வேண்டாமா? போறபோக்கில் எதுவாவது எழுதி விடுவதா?

சிங்களர்களோடு நட்பாய் இருந்தாலும் என்ன தவறு?  சிங்கள மக்களை தலைவர் பிரபாகரனே எதிரியாகக் கருதவில்லையே, ‘எனது போரானது சிங்கள இராணுவத்திற்கு எதிரானதுதானே ஒழிய, சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல!’ என பல சமயத்தில் கூறியவர்தானே தலைவர் பிரபாகரன். சிங்கள இனவெறியர்கள் தான் தமிழர்களின் எதிரியே ஒழிய, அப்பாவி சிங்கள மக்கள் அல்ல! என்பதுதானே புலிகளின் நிலைப்பாடும். அதனால்தானே,  தலைவர் பிரபாகரனின் மெய்க்காப்பு படையில்கூட சிங்களர்கள் இருந்தார்கள். புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் அவர்களின் துணைவியார்கூட சிங்களர் தானே, அதற்காக அவரையும் எதிரிப்பட்டியலில் இணைத்துவிட முடியுமா என்ன?  அதனால், சீமான் பூஜாவை வைத்து படமெடுத்தார்; அதனால், அவருக்குச் சிங்களர்களோடு தொடர்பிருக்கிறது என்பதெல்லாம் உப்புசப்பில்லாத வாதம்.

அடுத்து கத்தி பட விவகாரத்தில் ராஜபக்சே உறவினருக்கு ஆதரவாக சீமான் செயல்பட்டாராம். லைகா நிறுவனம் எடுத்த
 கத்தி படத்திற்கு எல்லா அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தபோது சீமான் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாம். தான் ஏன் கத்தி படத்தை எதிர்க்கவில்லை என்பதை விளக்கிய சீமான், ‘ஒரு தேசிய இனப்போராட்டத்தை ஒரு திரைப்படச் சிக்கலுக்கிடையே குறுக்காதீர்கள்’ என்றும், ‘கத்தி படம் எதிர்க்க வேண்டிய படமல்ல’ என்றும்,  இந்த எதிர்ப்பில் உள்நோக்கம் இருக்கிறதென்றும் சீமான் பேட்டி கொடுத்தார் (ஆதாரம் - https://youtu.be/o3oWumq7o3I). அவர் அந்த பேட்டியில் என்ன சொன்னாரோ அதுதான் கடைசியில் நடந்தது. அதன்பிறகு, லைகா நிறுவனம் தயாரித்த பல படங்கள் வெளிவந்தபோதும் எந்த படத்தையும் தமிழ் உணர்வாளர்கள் என்று சொல்லப்படுகிற எந்த அமைப்பும் எதிர்க்கவில்லையே ஏன்? மக்களின் உரிமைப்போராட்டங்களுக்கு ஒன்று திரளாதவர்கள் திரைப்படத்தை எதிர்க்க ஒன்று திரள வேண்டிய அவசியமென்ன? அந்தத் திரைப்பட எதிர்ப்பு ஒன்றுதான் 63 அமைப்புகளின் தலையாயப் பிரச்சினையா? அதற்குப் பிறகு அவர்கள் ஒரு போராட்டமும் செய்யவில்லையே ஏன்?  சரி! போராட மாட்டேன் என்று வெளிப்படையாக சொன்ன சீமானுக்கு சிங்களர்களோடு தொடர்பு இருக்கிறது என்றால், போராடுவோம் என்று சொல்லி கூடி கடைசியில் போராட்டத்தை கைவிட்ட 63 இயக்கங்களுக்கு யாரோடு தொடர்பு?

உருத்திரகுமாரன் தலைமையிலான நாடு கடந்த தமிழீழ அரசை தடுத்தது நாம் தமிழர் கட்சி என்றும், அதற்கு பணம் வந்து குவிந்தது என்றும் அடிப்படை அறிவே இல்லாது மனம்போன போக்கில் உதிர்த்திருக்கிறார்கள். நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கப்பட்டு அதற்கு பிரதமராக உருத்திரகுமாரனும், பல்வேறு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டு பலர் அதில் பொறுப்பில் இருக்கிறார்கள். இது கூட தெரியாமல் நாடு கடந்த தமிழீழ அரசு அமையவில்லை என்கிறார் அக்கட்டுரையாளர். அந்த அரசில் இருக்கும் யாரும் இதுவரை சீமானுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை. ஆனால்,  அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் இவரிடம் வந்து காதில் ஓதியதைப் போலவே இதனை எழுதியிருக்கிறார். சீமானுக்கு பணம் வந்தது என்று சொல்கிற ஒருவர்கூட இதுவரை எந்த ஆதாரத்தையும் வெளியிட முடியவில்லை என்பதிலிருந்தே இந்தக் குற்றச்சாட்டின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ளலாம்.

சீமானும், தமிழ்நாடும்:
அடுத்து சீமானின் தமிழ்நாட்டு அரசியலுக்கு வருகிறார். இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை பற்றிப்  பேசினாலும், தாது மணல் வைகுண்டராஜனிடமும்,  கிரானைட் பி.ஆர்.பி.யிடமும் சீமான் நெருக்கமாக இருக்கிறாராம்.  சீமானின் திருமணம் முடிந்ததும் வைகுண்டராஜன் கறிவிருந்து கொடுத்தாராம். அதனால் வைகுண்டராஜனின் பினாமியாம் சீமான். அதற்கு ஆதாரமாக வினவு கட்டுரையை கொடுத்துள்ளார் (http://www.vinavu.com/2013/10/25/seeman-natarajan-vaikudarajan-tamil-desiam/) . அந்தக் கட்டுரையில், தன் திருமணத்தை முடித்துக்கொண்டு நேராக இடிந்தகரைக்குச் சென்ற சீமான், அங்கு ஆரத்தி வரவேற்பு, கறிச்சோறு விருந்து முடித்துவிட்டு அடுத்து சென்றது, சென்னை ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் நடந்த வைகுண்டராஜனின் மகன் திருமணத்திற்கு என்று இருக்கிறது. திருமணம் முடிந்ததும் எல்லோரும் சுற்றுலாத் தளங்களுக்கு செல்வார்கள். ஆனால், சீமான் சென்றதோ இடிந்தகரை போராட்டத்திற்குத்தான். அன்று  இடிந்தகரை மக்கள் தான் கறி விருந்து வைத்தனர். அதை அப்படியே மாற்றி வைகுண்டராஜன் கறிவிருந்து வைத்ததாக எழுதியிருக்கிறார்கள். யார் விசாரித்து பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில் தனது விருப்பத்திற்கு உண்மைக்குப் புறம்பானவற்றையெல்லாம் எழுதியிருக்கிறார்.
அடுத்து, வைகுண்டராஜனின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம். அது வைகுண்டராசனின் பினாமி சீமான் என்பதை உறுதிப்படுத்துகிறதாம். நியூஸ் 7 தொலைக்காட்சியில் தேர்தல் நேரத்தில் கருத்துக்கணிப்பு விவாதங்களில் நாம் தமிழர் கட்சி பெயரைக்கூட குறிப்பிடாமல் தவிர்த்தார்கள். கூட்டணியில் நின்ற அனைத்துக்கட்சிகளை தனியாக குறிப்பிட்டுவிட்டு தனித்து நின்ற நாம் தமிழர் கட்சியை மற்றவைக்குக் கீழ் காட்டினர். நாம் தமிழர் கட்சியைக் குறிப்பிட வேண்டும் என்று கோரிக்கை வலுத்தபோது, ‘உங்கள் பலத்தை நிரூபியுங்கள் பின்னர் நாங்கள் குறிப்பிடுகிறோம்’ என்று விவாதத்திலேயே பதில் அளித்தார்கள். அப்படிப்பட்ட தொலைக்காட்சி சீமானுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது உச்சகட்ட முரண். அப்படியும் நம்பிக்கையில்லை என்றால் நியூஸ் 7 நிகழ்ச்சிகள் அனைத்தையும் அவர்களின் யூ டியூப் தளத்தில் (ஆதாரம்- https://www.youtube.com/user/news7tamil/) பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். அதில் சென்று சீமான் தொடர்பான செய்திகள், பேட்டிகள் எத்தனை இருக்கிறது? மற்றவர்களுடையது எத்தனை இருக்கிறது? அந்தத் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சிகளில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் எத்தனை நாட்கள் பங்கெடுத்திருக்கிறார்கள் என்று பார்த்து உண்மைநிலையை அறிந்து கொள்ளலாம்.

02, மார்ச், 2016 அன்று வெளிவந்த ஆனந்த விகடன் இதழுக்கு சீமான் அளித்த பேட்டியில், “ஐம்பது ஆண்டுகளாக மாநிலத்தை ஆளும் முதலமைச்சர்களை தரகர்கள் எனச் சொல்கிறீர்கள். இது சரியா? முறையா? என்ற கேள்விக்கு, “வேறு எப்படிச் சொல்வது? ஆற்று மணலை அள்ளுபவர்களோடு உங்களுக்கு என்ன வேலை? பி.ஆர்.பி கல்லை உடைத்தார் என்றார்கள். அவர் ஏழுமுறை சிறந்த குடிமகன் விருதை குடியரசுத் தலைவர் கையால் வாங்கியிருக்கிறார். கல்லை உடைப்பவர் எப்படி ஏழு முறை விருது வாங்க முடிந்தது? கால் நூற்றாண்டாக கல்லை உடைத்தார் என்றால், இவரிடம் வாங்கித் தின்ற புரோக்கர் யார்? வைகுண்டராஜன் தாது மணல் அள்ளுகிறார் என்றால், அவரிடம் வாங்கித் தின்னாதவர் யார்? படிக்காசு மணல் அள்ளுகிறார்; ஆறுமுகசாமி மணல் அள்ளுகிறார் என்றால், இவர்களிடம் வாங்கித் தின்பது யார்?  `பெப்சி, கோக் வேண்டாம் எனப் போராடும் மக்கள் மீது ஏன் தடியடி நடக்கிறது? இந்த நிறுவனங்களோடு இவர்களுக்கு என்ன கூட்டு? அனைத்து அரசுத் துறைகளிலும் கமிஷன் வாங்குகிறார்கள். இல்லை எனச் சொல்லச் சொல்லுங்கள்; நான் கட்சியைக் கலைத்துவிடுகிறேன். எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்த ஜெயலலிதா அரசு, தண்ணீரை மட்டும் ஏன் பத்து ரூபாய்க்கு விற்கிறது? தண்ணீரை இலவசமாகக் கொடுத்தால் இவர்களுக்கு கமிஷன் கொடுக்கும் தனியார் முதலாளி பாதிக்கப்படுவான். அப்படியானால், இவர்களைத் தரகர் என்றுதானே சொல்ல முடியும்? முதலமைச்சர் சிறிய தரகர், பிரதமர் பெரிய தரகர் அவ்வளவுதான் வித்தியாசம்.  (ஆதாரம் -  https://goo.gl/iOAnBd). பதவியில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இங்கே கொள்ளைகள் நடைபெறவில்லை. தனியார் முதலாளிகளின் கமிஷனுக்காக தரகர்களாக முதலமைச்சரும், பிரதமரும் செயல்படுகிறார்கள்” என்ற சீமானின் மிக நேர்மையான பதிலை தான்  "பி.ஆர்.பியிடம் வாங்கித் தின்றுவிட்டு அவரையே குற்றவாளியாக்குவது நியாயமா?" என்று பேசியதாக திரித்துக்கூறி கூறி பி.ஆர்.பிக்கு ஆதரவாளராக சித்தரிக்க முற்படுகிறார். 

இயற்கை வளங்கள் பற்றியும், கல்வி பற்றியும் தான் சீமான் அதிகமாக பேசுகிறார். அதனால், அதில் அவரைத் தவறானவராக காட்ட வேண்டும்.  மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளையில் சீமானை தொடர்புபடுத்தி அவதூறைப் பரப்பியாகிவிட்டது. அடுத்து இலவசக் கல்வி என்பதில் எப்படி அவதூறு குற்றச்சாட்டை வைக்கலாம் என்று மண்டையைக் குடைந்து யோசித்திருக்கிறார். தமிழராக இருக்க வேண்டும். அதேநேரம், பெரிய பணக்காரராகவும் இருக்க வேண்டும். அப்படி யாரைப் பிடிப்பது என்று யோசித்து சாமர்த்தியமாக பாரிவேந்தரை கதைக்குள் கொண்டு வந்திருக்கிறார் கட்டுரையாளர். 2016-தேர்தலுக்கு, சீமானுக்கு 50 லட்சம் இலட்சம் நன்கொடை கொடுத்துள்ளாராம் பச்சமுத்து பாரிவேந்தர். எங்கே கொடுத்தார்? எப்படி கொடுத்தார்? எதற்காக கொடுத்தார்? அதற்கு என்ன சாட்சி? ஆதாரம் எங்கே?  என்று கேட்டால் ஒருபதிலும் வராது. ஆதாரமும் வராது. உண்மை இருந்தால்தானே ஆதாரம் தர முடியும்? ஒரு ஆதாரமும் இல்லாமல் அடுக்கடுக்கான அவதூறுகளை அள்ளிவீசி அதனை வாட்சப்பிலும், பேஸ்புக்கிலும் பரப்பி தள்ளுவதுதானே அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அசைன்மென்ட். அதனைக் கனகச்சிதமாக செய்ய பெரும்சிரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார் கட்டுரையாளர்.

வைகுண்டராஜன் வீட்டுத் திருமணத்திற்கு சென்றதால் தாது மணல் கொள்ளையை ஆதரிக்கிறார் என்றும்,  தன் திருமணத்திற்கு வந்த மூத்தவர்களின் ஆசி வாங்கியதால் அவர்களின் அரசியலை ஏற்றுக்கொள்கிறார் என்றும் கூறுவது, ‘ஓ.பி.எஸ்ஸும், ஸ்டாலினும் சிரித்துக் கொண்டார்கள்; அதனால், அவர்களுக்குள் தொடர்பிருக்கிறது எனும் சசிகலாவின் அரசியல் அறிவோடு(!) ஒப்பிடத்தக்கது. கடந்த தேர்தலின்போது நாம் தமிழர் கட்சியின் சார்பாக வெளியிடப்பட்ட ஆட்சியின் செயல்பாட்டு வரைவு அறிக்கையில், ‘கனிம வள பாதுகாப்பு’ என்ற தனி அத்தியாயத்தில் இந்த தாது மணல் மற்றும் கிரானைட் கொள்ளையைக் குறிப்பிட்டு, ‘கனிம வளங்கள் அனைத்தும் மக்களுக்கே சொந்தம்; அதனால், தனி நபர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஒப்பந்தங்கள் திரும்பப்பெறப்படும்’ என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.   (ஆதாரம்- http://makkalarasu.com/downloadables/NTKPlanks_fullsize.pdf - பக்கம் 228). தன்னுடைய தேர்தல் அறிக்கையில் வெளிப்படையாக தமிழ்க வளத்தை சுரண்டுபவர்களின் உரிமங்களை ரத்து செய்வேன் என்று சொன்னவர் சீமான் ஒருவர் மட்டும்தான்.

சீமானும், விவசாயமும்:
விவசாயத்தை அரசுப் பணியாக மாற்றுவேன் என்று சொல்லும் சீமானை அந்த விசயத்தில் ஏதாவது சொல்ல வேண்டுமல்லவா!  அதற்காக இப்போது விவசாயம் பக்கம் திரும்பியிருக்கிறார்கள்.  தமிழகம் முழுவதும் விளை நிலங்களில் அங்கீகாரம் இல்லாமல் விற்பனை செய்யப்படும் வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என கடந்த செப்டம்பர் 8-ம்தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தத் தீர்ப்பில் உள்ள குழப்பங்களையும், தெளிவற்ற தன்மையையும் எதிர்த்து வீட்டு மனை வணிகர்கள், வர்த்தகர்கள், இடைநிலையர்கள், முகவர்கள், தொழிலாளர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அதில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது தெளிவாக, “இந்த தீர்ப்பானது,  யானை ராஜேந்திரன் கொடுத்த பொதுநலவழக்கில் நீதிமன்றத்தின் கேள்விக்கு அரசு சரியான விளக்கம் அளிக்காததால் விளைந்தது. விவசாய நிலங்களை விற்பனை செய்வது தவறு;  விளைநிலங்கள் வீட்டு மனையாவது மிகக்கொடுமையானது. ஆனால், இந்த தீர்ப்பில் பல குழப்பங்கள் இருக்கிறது. ஏற்கனவே, அரசு அனுமதி அளித்த, பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருகிற மனைகளைக்கூட பதிவு செய்ய முடியாது என்பது கொடுமையானது. அதனால், இந்தத் தொழிலில் ஈடுபடும் பலர் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் குடும்பம் பாதிக்கப்படும். ஆகவே, அரசு அடுத்த விசாரணையின்போது சரியான விளக்கங்களை கொடுத்து விளைநிலங்கள் பதிவை தடை செய்து, மற்ற பட்டா உள்ள மனைகளையும் பலவருடங்கள் வாழ்ந்து வரும் வீடுகளையும் பத்திர பதிவு செய்ய அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பேசினார். (ஆதாரம் - https://goo.gl/jZomnK) . அதை வைத்து  ரியல் எஸ்டேட் ஆட்களிடம் பணம் வாங்கினார் என்று கதைக்கட்டியிருக்கிறார்கள். சீமான் பேசிய காணொளியைப் பாருங்கள்; அதன் பிறகு முடிவு செய்யுங்கள் உண்மை என்னவென்று.

சீமானும், ஜல்லிகட்டும்:
மதுரையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சீமான் படத்தை வைக்க முயன்றதாகவும் அதை மாணவர்கள் அனுமதிக்கவில்லையாம். அதன் பிறகு சீமான் வந்தபோது எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தை பிசுபிசுக்க தனியாக போராட்டம் நடத்தியதாகவும் கூறியிருக்கிறார். இந்த ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்களும், மக்களும் அனுமதித்த ஒரே அரசியல் கட்சி தலைவர் சீமான் மட்டும்தான் (ஆதாரம்: https://www.youtube.com/watch?v=yDb3p31ykno ). அலங்காநல்லூர் போராட்டத்தில் சீமான் பங்கெடுத்தார் என்பதும், மாணவர்களை காவல்துறை கைதுசெய்து மண்டபத்தில் வைத்திருந்தபோது அவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தைக் கையிலெடுத்ததை சீமான் கைவிடச் சொல்லவும்தான் கைவிட்டார்கள் என்பதும் இங்கு வசதியாக மறைக்கப்பட்டு விட்டது. ‘மாணவர் போராட்டத்தில் அரசியல் கலக்கத்தேவையில்லை; அவர்களுக்கு ஆதரவாகத் தனியாகப் போராடலாம்’ என்றுதான் மதுரையில் அவரும் ஓரிடத்தில் அமர்ந்து போராடினார். அங்கிருந்து அதனை வலியுறுத்தி பேட்டியுமளித்தார். தனியாக அவர் செய்தது போட்டி ஆர்ப்பாட்டமல்ல. மாணவர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்.

மதுரை ஆர்ப்பாட்டத்திற்கு சீமான் வந்தபொழுது தண்ணீர் பாக்கெட்களை அங்கும் இங்கும் சிலர் எறிந்தது உண்மைதான். சீமான் அவர்கள் உடனே மைக்கில், ‘இந்த தண்ணீருக்கும் தான் நாம் போராடிக்கொண்டிருக்கிறோம். அதை கீழே போட்டு வீணடிக்காதீர்கள்’ என்றார். அதனைக் கேட்டு யாரும் தண்ணீர் பாக்கெட்டுகளை எறியவில்லை. அதன் பிறகு
 3 மணி நேரம் அங்கிருந்த அவர் மாணவர்களோடு பேசிவிட்டுதான் கிளம்பினார்.  ஜல்லிக்கட்டு பற்றிய விழிப்புணர்வை ஊர் முழுக்க  பேசி கொண்டுவந்ததில் பெரும்பங்கு சீமானுக்கு இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த மூன்று வருடமாக எல்லா இடங்களிலும் ஜல்லிக்கட்டில் நமக்கு இழைக்கப்பட்ட அநீதியை பேசி வந்திருக்கிறார். சனவரி, 18, 2015 அன்று வீரத்தமிழர் முன்னணி சார்பாக திருச்சியில் நடைபெற்ற தமிழர் சிலம்பக்கலைத்திருவிழா பொதுக்கூட்டத்தில் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்துப் பேசியிருக்கிறார்; (ஆதாரம்- https://www.youtube.com/watch?v=3pKmFk0ehXI ) இதில் ஜல்லிக்கட்டு பேரவை மாநிலத் தலைவர் ராஜசேகரனும் பங்கெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓராண்டுக்கு முன்பு, 27-01-16 அன்று மதுரை, திருப்பரங்குன்றத்தில் நடந்த திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டத்தில் பீட்டாவின் அந்நிய சதி குறித்தும், A1, A2 பால்ரகங்கள் குறித்தும் (ஆதாரம்- https://www.youtube.com/watch?v=dt4kQZp-OPs )  பேசியிருக்கிறார். அதுமட்டுமல்லாது தேர்தல் பரப்புரைகளிலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும்கூட அக்கருத்தை வலுவாக ஊன்றி ஜல்லிக்கட்டு தடைக்குப் பின்னால் இருக்கும் சர்வதேச சதியை உலகுக்கு அம்பலப்படுத்தி இருக்கிறார் (ஆதாரம்: https://www.youtube.com/watch?v=fI9utBCAv7I   , https://www.youtube.com/watch?v=BYJspa434Xk  ).      அவரை ஜல்லிக்கட்டு போராட்டத்தை பிசுபிக்கவந்தவர் என்றுகூறுவது அபத்தத்தின் உச்சம்.

சீமானின் ஆதரவாளர்கள்:
சீமானை ஆதரிப்பவர்கள் உணர்ச்சிவசப்படக்கூடிய, தமிழ் மீது பற்று உடைய, ஈழப்போரால் விரக்தி அடைந்த, திராவிடக் கட்சிகளின் ஊழலால் வெறுப்படைந்த அப்பாவி இளைஞர்களாம். அவர்களிடம் சீமானைப் பற்றி விளக்கி கூறியதும் அதிர்ச்சி அடைகிறார்களாம். பிறகு வேறு யாருமில்லை என்பதால் சீமானை  ஆதரிக்கிறேன் என்கிறார்களாம். கருணாநிதி பேசி ஏமாற்றியது போல சீமானும் பேசி ஏமாற்றுகிறாராம். எந்த ஆதரவாளரிடம் இவர் பேசினார் என்று தெரியவில்லை. நாம் தமிழர் கட்சியில் இருக்கும் இளைஞர்கள் அறிவார்ந்தவர்கள் என்பதை அவர்கள்  மேடையில் பேசுவதை வைத்தும்,ஊடகங்களில் பலவருட அரசியல் அனுபவம் வாய்ந்தவர்களோடு விவாதிக்கும்போதும், சமூக வலைத்தளங்களில் பதிவுசெய்யும் கருத்துகள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.  தீ, எங்கள்தேசம் போன்ற மாத இதழ்களை அவர்களே யார் துணையுமின்றி நடத்துகிறார்கள்.(ஆதாரம்- http://www.thee.co.in/) அதில் அவர்கள் எழுதும் கட்டுரைகள் எல்லாம் மிகத் தெளிவான பார்வைகளைக் கொண்டிருக்கிறது. அவர்களை ஏதோ உணர்ச்சிவசப்பட்ட சிறுவர்கள்  என்ற ரீதியில் சித்தரிப்பது மிகத்தவறானது. கண்டனத்திற்குரியது.

ஆட்சிக்கு வரும் முன்னரே கற்பழிப்பு , நிதி மோசடி,  நம்பிக்கைத் துரோகம் போன்ற குற்றசாட்டுகள் இருக்கிறதாம்.  ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும் என்று கேள்வி எழுப்புகிறார். நமது கேள்வி என்னவென்றால் இதற்கெல்லாம் எங்கே ஆதாரம்.? யாரிடம் பணம் வாங்கி ஏமாற்றினார்? கற்பழிப்பு வழக்கு என்ன ஆனது?  யாருக்கு நம்பிக்கை தந்து துரோகம் செய்தார்? எதற்குமே ஆதாரமில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடும் என்ற நினைப்பில் கட்டுரை முழுக்க புலிகளுக்கு துரோகம் செய்தார், பணம் வாங்கினார் என்று திரும்ப திரும்ப எழுதி மனதில் பதியவைக்க மெனக்கெடுகிறார். பாவம்! அந்த முயற்சி தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. தொண்டர்கள் நல்லவர்கள்; தலைவர் மோசம் என்று சொல்கிறார். தலைவர் எவ்வழியோ, தொண்டரும் அவ்வழியே என்பதுதான் காலங்காலமாக தமிழக அரசியல் உணர்த்திவரும் நிதர்சனம். நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் நல்லவர்கள்; தலைவர் மோசம் என்று எழுதுவது கட்சியின் தொண்டர்களை குழப்பி விடுவதற்கும், புதிதாக கட்சியில் எவரும் இணையாமல் தடுப்பதற்குமான ஒரே வழி என்று நினைத்து தனது அப்பட்டமான காழ்புணர்ச்சியை மொத்தமாய் கொட்டித்தீர்த்திருக்கிறார்.

கடைசியாக சீமானுக்கு சில கேள்விகள்:

தன்னுடைய கடைசி கேள்விகளாக சிலவற்றை முன்வைத்துள்ளார். ஒவ்வொன்றாக பார்ப்போம்..

1.சீமான் அவர்களே! "ஒரு விதவை  இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால், என்னை செருப்பால் அடியுங்கள்" என்று முழங்கிவந்தீர்கள். ஆனால், திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும் அவரைத் திருமணம் செய்து கொண்டீர்கள். இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ள பாசமா?

பதில்  இலங்கை விதவையாக இருக்கும் அகதி பெண்ணை திருமணம் செய்யவில்லை என்றால், என்னை செருப்பால் அடியுங்கள் என்று சீமான் எப்பொழுது? எங்கே? எந்தக் கூட்டத்தில் பேசினார்? இல்லை! எந்த பேட்டியில் கூறியிருக்கிறார்? எல்லாக் குற்றச்சாட்டையும் போல இதற்கும் ஆதாரமில்லை.  உண்மையில் விகடனுக்கு அளித்த ஒரு பேட்டியில் ஈழத்திற்கு சென்று வந்த பிறகு,  ஈழப்பெண்ணை திருமணம் செய்ய விரும்பினேன் என்றுதான் கூறினார். (ஆதாரம்- https://youtu.be/ePF8a3F9N78).  திருமணம் என்பது இருமணங்களின் சங்கமம். ஒருவர் விருப்பத்தினால் மட்டும் கூடிவருவதல்ல. அவர் ஈழப்பெண்ணை திருமணம் செய்ய விரும்பியிருந்தாலும் அவரை திருமணம் செய்ய யாராவது சம்மதித்திருக்கவேண்டும். அதே போல் ஒருவரின்பால் ஏற்படும் விருப்பம்  திட்டமிட்டு நிகழ்வதல்ல. திடீரென்று நிகழ்ந்துவிடும். அது தானே காதல்.  அப்படித்தான் சீமானும், அவரின் மனைவியை மனம் ஒத்து விரும்பியே திருமணம் செய்திருக்கிறார். இதனை அவர் மனைவியே விகடன் பேட்டியில் கூறியிருக்கிறார். (ஆதாரம்-https://youtu.be/gyH3qgUBshw) . அவர்கள் வீட்டில் முதலில் மறுப்பு தெரிவித்தும், தான் விடாப்பிடியாக இருந்ததால் திருமணத்திற்கு சம்மதித்தனர் என்றும் கூறியிருக்கிறார். உண்மை இப்படி இருக்க அமைச்சர் வீட்டிலிருந்து வரன் வந்ததும் திருமணம்  செய்துகொண்டதாக சொல்வது அடிப்படையற்ற பச்சைப்பொய். 

2.
 “தலைவர் பிரபாகரனை சிறையில் அடைக்க வேண்டும்” என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழத்தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை! நடிகை விஜயலட்சுமி உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா? (தைரியமாக புகார் கொடுத்தது ஒரு பெண் தான். புகார் கொடுக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு இருப்பது எத்தனை விஜயலட்சுமிகள் என்று சீமானுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்)

பதில்
  -  ஈழப்படுகொலையை நிகழ்த்திய காங்கிரசை தமிழர் மண்ணிலிருந்து அப்புறப்படுத்துவதற்கு, அதனை எதிர்த்து நிற்கும் பலமான கூட்டணியான அதிமுகவைப் பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் அதிமுகவுக்கு வாக்குக் கேட்டார். காங்கிரசை எதிர்த்து கம்யூனிஸ்ட், தேமுதிக எது நின்றாலும் அதற்கு வாக்குக் கேட்டார் சீமான். அதேசமயம், திமுக கூட்டணியில் இருந்த விடுதலைச்சிறுத்தைகள், பாமக ஆகியவற்றை எதிர்த்து எந்தவொரு இடத்திலும் அதிமுகவுக்கு வாக்குக் கேட்கவில்லை. இது முழுக்க முழுக்க காங்கிரஸ் எதிர்ப்பு நிலைப்பாடுதானே அன்றி, அதிமுக ஆதரவு நிலைப்பாடு அல்ல என்பது இதன்மூலம் தெளிவாகும். மேலும், அவ்வாறு பரப்புரை செய்தது 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த  சட்டசபை தேர்தலில்தான்.  நடிகை விஜயலட்சுமி புகார் அளித்ததோ அந்தத் தேர்தலில் அதிமுக வென்று ஆட்சி அமைத்த மூன்று மாதங்களுக்கு பிறகுதான். அதாவது  2011ஆம் ஆண்டு ஜூன் மாதம் தான் (ஆதாரம்-https://goo.gl/Auc2Zs).  மூன்று மாதங்களித்து கொடுக்கப்போகும் புகாரில் தப்பிக்க  முன்னரே ஜெயலலிதாவை ஆதரித்தாரா சீமான்? அவர் ஆதரிக்கும்போது ஜெயலலிதா ஆட்சியிலேயே இல்லையே?  எது எப்பொழுது நடந்தது என்று யாரும் பார்க்கமாட்டார்கள் என்ற தைரியத்தில் இஷ்டத்துக்கு விளையாடியிருக்கிறார் கட்டுரையாளர்.  இதில் கவனிக்கத்தக்க இன்னொன்று, ஜெயலலிதா எப்போதும் இன்னொரு தலைவர் உருவாவதை விரும்புபவரில்லை. அதனால்,  புகார் உண்மையென்றால், அவரே நடவடிக்கை எடுத்து முளையிலேயே எறிந்திருப்பாரே?  ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? சரி! அவரை ஆதரித்ததால் நடவடிக்கை எடுக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம்.  சென்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஜெயலலிதாவை எதிர்த்தபோது இந்த வழக்கைத் தூசிதட்டி எடுத்து சீமானை தேர்தல் களத்திலிருந்தே விரட்டியிருக்கலாமே? அவரது பிம்பத்தை அடியோடு நொறுக்கியிருக்கலாமே? அந்தப் புகாரில் துளிகூட உண்மையில்லை என்பதால்தானே  எந்த நடவடிக்கையும் இல்லாமல் போனது. மத்தியில் ஆண்டுக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி 2011ஆம் ஆண்டு தேர்தலில் மாநிலத்தில் படுதோல்வியைச் சந்தித்ததற்கு சீமானின் பரப்புரையே முதன்மையானக் காரணம் என்பதால், அவரின் அரசியலை அழிக்கவேண்டும் என்ற நோக்கில் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட புகார் அது என்பது இதன்மூலம் விளங்கும்.

விஜயலட்சுமி மட்டும்தான் தைரியமாக புகார் கொடுத்தாராம். மற்றவர்கள் மனதிற்குள் புழுங்கி கொண்டு இருக்கிறார்களாம். அது சீமானுக்கும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியுமாம். சரி! அவர்களுக்கு மட்டுமே தெரிந்தது இவருக்கு எப்படி தெரியவந்தது?
 என்ன இது கொடுமை! இவரே அவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என்கிறார். ஆனால், பல விஜயலட்சுமிகள் பலர் புகார் கொடுக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு இருப்பதாகவும் சொல்கிறார். உங்கள் பிதற்றல்களுக்கு ஒரு அளவு இல்லையா மகராஜா?

3.
 சீமானே ஈழத்தமிழர்களை பற்றிப் பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை! உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டிக்கொண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் 'எல்லாம் எப்படி சாத்தியமானது?  நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா?  இதெல்லாம் ஈழத்தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?

பதில் - அரணையூரில் அவரின் தாய் தந்தை இன்றளவும் இருப்பது குடிசை வீட்டில்தான் (ஆதாரம்- https://goo.gl/oxA8iE). அது அவரது ஊரில் வருடந்தோறும் நடக்கும் பொங்கல் விழாவிற்குச் செல்லும் அனைவருக்கும் தெரியும். அவர்களின் பூர்வீக நிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் இருக்கும் மாடிகூட இல்லாத வீட்டைத்தான் பங்களா வீடு என்கிறார் கட்டுரையாளர். ஓட்டு வீடெல்லாம் எப்போது பங்களா ஆனது என்பது அவருக்கே வெளிச்சம். கோடி கோடியாக பணத்தை சுருட்டி ஊரெல்லாம் வீடு கட்டி வாழ்கிற தலைவர்கள் வாழ்கிற நாட்டில், தன் கிராமத்தில் தன் பெற்றோருக்கு அவர்களின் ஆசையினால் எளிய வீட்டை கட்ட முற்படுவதுகூட இவருக்கு தவறாகப்படுகிறது. தமிழகத்தில் நடக்கும் மற்ற திருமணங்களையெல்லாம் பார்த்த பிறகும் எந்தவித அநாவசிய செலவுகளுமற்ற சீமானின் திருமணத்தை ஆடம்பரத் திருமணம் என்பது பெரும் நகைச்சுவை. (ஆதாரம்-https://www.youtube.com/watch?v=F2HKUQNNdOo) சீமான் திருமணத்தில் ஆடம்பரம் என்றால், அது உலகம் முழுவதிலும் இருந்து திருமணத்திற்கு வந்த தமிழ் மக்களும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தும்தான்.  சீமான் வீட்டிற்கு யார், எப்போது போனாலும் உணவு கிடைக்கும். பசி, பட்டினியை நன்றாக உணர்ந்திருந்தவர் என்பதால் படவாய்ப்பு தேடும்போதே அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். அவர் வீட்டில் சாப்பிடாத உதவி இயக்குனர்கள், பட வாய்ப்பு தேடுபவர்களே இல்லை என்றுகூறுகிற அளவுக்கு அன்னச்சத்திரம் போல இயங்கியது அவரது வீடு. அப்போதே அதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர், தன் திருமணத்திற்குப் பிறகு செய்யமாட்டாரா என்ன?  சீமானின் கடவுச்சீட்டை புதுப்பித்து தர மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக தொடுத்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. உண்மை இவ்வாறிருக்க சீமானின் வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் என்று பொய்யுரைக்கிறது கட்டுரை. இதற்குமுன் அவர் சென்ற வெளிநாட்டு பயணங்கள்கூட கூட்டங்களில் தமிழர்களிடையே பேசுவதற்காகத்தான் மேற்கொள்ளப்பட்டது. புலம்பெயர் தமிழர்களின் அழைப்பை ஏற்று அங்கு செல்வதே குற்றமாகிவிடுமா என்ன?  ஈழத்தமிழர்களிடம் பணம் வாங்கி அரசியல் செய்வதாக சீமான் கட்சி தொடங்கிய நாளிலிருந்து அவரை எதிர்ப்பவர்கள் சொல்லிவருகிறார்கள். இந்த ஈழத்தமிழரை ஏமாற்றி சீமான் பணம் வசூல் செய்தார் என்று ஒரே ஒருவரையாவது கொண்டு வந்து நிறுத்திவிட்டு, அப்புறம் அவரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திக் கேள்வி கேளுங்கள்.  

4.நாம் தமி‌ழர் நண்பர்களுக்கு! கற்பழிப்புப் புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை  திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில் விடுதலைப்புலிகள்தான் தமிழர்களை சுட்டுக் கொன்றனர் என்று வாக்குமூலம் கொடுத்தவரை போய் கர்மவீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன்  வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள்

பதில் - கற்பழிப்பு புகார் -  பொய் குற்றச்சாட்டு (ஆதாரத்துடன் தெளிவான விளக்கம் மேல் பத்தியில் இருக்கிறது)
ஈழ விதவை பெண்ணை திருமணம் செய்வேன் வாக்குறுதி  - பொய் குற்றச்சாட்டு (அதற்கும் ஆதாரத்துடன்  தெளிவான விளக்கம் மேல் பத்தியில் இருக்கிறது)
ஐ.நா விசாரணை குழுவில் விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை சுட்டு கொன்றனர் வாக்குமூலம் - பொய் குற்றச்சாட்டு (இதற்கும் ஏற்கனவே இக்கட்டுரையில் விளக்கம் தரப்பட்டுள்ளது.)

இப்படி பொய் குற்றச்சாட்டுகளைச் சொல்லி அவதூறுகளை வீசி எப்படியாவது சீமானை வீழ்த்த நினைக்கும் போதுதான், கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக சீமான் இருப்பாரோ என யோசிக்கத்தோன்றுகிறது. 

இன்றைய சூழலில் சீமான் முன்வைக்கும் அரசியலானது, தமிழகத்திற்கு மிக அத்திவாசியமான ஒன்று. தமிழர்களுக்கென்று இருந்த அரசியல், அதிகாரம், பொருளாதாரம், பண்பாடு, கலாச்சாரம், உரிமை, தற்சார்பு, விவசாயம், இயற்கை வளங்கள் என எல்லாம் கையைவிட்டு போயிருக்கிறது. இந்நிலையில் அதற்காக தன்னாலான அளவு குரல் கொடுத்து மாற்று சக்தியாக வளர்ந்து வரும் சீமானை அழித்துவிட துடிப்பவர்கள் தமிழக நலன்களுக்கு எதிரான ஆபத்து சக்திகள் என்றே நான் கருதுகிறேன். சீமான் தவறானவர் என்றால், சரியானவர் யார் என்று காட்டவேண்டும். ஆனால், இப்படியான கட்டுரைகளை எழுதுபவர்கள் அவரை சிதைக்க மட்டுமே தங்கள் எழுத்தை பயன்படுத்துகிறார்களே ஒழிய அவருக்கான மாற்றை உருவாக்கவோ, கைகாட்டவோ ஒருபோதும் முயலவில்லை.

பாதி உண்மை! பாதி பொய்! என்ற அளவில் கூட இல்லாமல் முழுக்க முழுக்க பொய்களையும், ஆதாரமற்ற அவதூறுகளையும் சுமத்தி சீமானின் அரசியல் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் ‘உண்மைத்தமிழன்’ என்ற பெயரில் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. இல்லை! இல்லை! புளுகுமூட்டைகள் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது.  இக்கட்டுரையை வெளியிட்டிருப்பவர், தனது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரத்தோடு பதிலளித்தால் தனது பக்கத்தையே அழித்துவிடுவதாக கூறியிருக்கிறார். பதில்களை ஆதாரத்தோடு கொடுத்திருக்கிறேன். எப்படியும் அவர் சொன்ன சொல்லை காப்பாற்றப்போவதில்லை. இதனையெல்லாம் மறுதலித்து ஏதாவது புதுகதை ஒன்றை கட்டக்கூடும். ஆனால், இக்கட்டுரையின் நோக்கம், அவருக்குப் பதில் சொல்வது அல்ல! அது நமது வேலையும் அல்ல! சீமானுக்கு எதிரான பொய்யுரைகளை உண்மையென்று நம்பியவர்களுக்கு இவ்வுண்மைகள் சென்று சேர வேண்டும் என்பதுதான். இதனைப் படிப்பவர்களுக்கு என் வேண்டுகோளெல்லாம் ஒன்றே ஒன்று தான். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது தான் அறிவு என்கிறார் வள்ளுவர். ‘உண்மைத்தமிழன்’ என்ற பெயரில் அவர் எழுதியதையும், ‘உண்மையான உண்மைத்தமிழன்’ என்ற பெயரில் நான் எழுதியதையும் நடுநிலைமையோடு உங்கள் சுயஅறிவு கொண்டு சிந்தித்து, ஆராய்ந்து முடிவெடுங்கள். சீமானின் உண்மை முகத்தை தெரிந்துகொள்ளுங்கள்.

நான் என் நிஜ முகம் காட்டியே இந்த கட்டுரையை எழுதியிருக்கலாம். ஆனால்
, அது நீங்கள் எடுக்கும் முடிவுகளில் எந்த அழுத்தத்தையும் கொடுக்கக் கூடாது என்றுதான் ‘உண்மைத்தமிழன்’ என்ற பெயரில் எழுதியிருக்கிறேன்.  என் எழுத்துக்களில் ஏதேனும் முரண் இருந்தாலோ, கேள்விகள் இருந்தாலோ கீழிருக்கும் பின்னூட்டத்தில் கேளுங்கள். முடிந்தவரை கட்டாயமாக பதிலளிக்கிறேன்.

நேரம் ஒதுக்கி உண்மையை அறிந்து கொள்ள முயற்சித்தமைக்கு நன்றி.

36 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. சீமான் ஈழத்தில் பிரிகேடியர் அண்ணன் தமிழ்ச்செல்வனின் மமெய்க்காப்பாளன், செயலாளர் (இருவரும் போரில் வீர மரணம் அடைந்தவர்கள்) துணைவியாரை திருமணம் செய்ய ஏற்பாடு நடைபெற்றது, அனால் அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் அண்ணனுக்கு மன்னிப்பு கடிதம் எழுதி அனுப்பி விட்டு, அந்த பெண் பிரான்சு சென்று விட்டார், இப்போதும் அங்கு தான் உள்ளார் இந்த விடயம் பல ஈழ தமிழர்களுக்கு தெரியும்....

    ReplyDelete
    Replies
    1. veru ella pen kidaikka villaiya

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  3. இந்த உண்மைகளை எழுதிய இந்த பக்கத்தின் அட்மின் இதை கொஞ்சம் முன்னாடியே எழுதிற்காலம் அவர்கள் எப்படி ஒவ்வொரு முறையும் சீமான் பற்றின செய்திகள் வரும்போதுயெல்லாம் அந்த ப்லாக்ஸ்பாட்டை காப்பி பேஸ்ட் செய்வார்களோ அதேபோல் நாமும் செய்வோம் உண்மையை எல்லோருக்கும் தெரியும்படி செய்வோம் .....நாம் தமிழர் .

    ReplyDelete
    Replies
    1. இந்த வலைப்பதிவை தமிழனின் வலைப்பதிவில் பதியுங்கள் சகோ...

      Delete
    2. சகோ அவன் Comment பண்ணும் Optionயை Disable செய்துவிட்டான் கோழை.

      Delete
  4. தெளிவான பதில்கள், சிறப்பு!

    ReplyDelete
  5. மிகவும் சிறப்பான முயற்சி, தொகுப்பு, உழைப்பு அனைத்திற்க்கும் நன்றி. மனமார்ந்த பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. அருமையான பதிவு சகோ சீமானை சைமான் என்று சொல்லி கொண்டு ஒரு கும்பல் சுத்துகிறது அதற்கு எதவது பதவி போடுங்க

    ReplyDelete
  7. அட்மின் அண்ணன் சீமானை செபாஸ்டியன் சைமன் என்று சொல்கின்றனர் அதற்கு ஏதோ ஒரு காவல் துறை வழக்கின் தழை ஆதாரமா காட்டுகிறார்கள் இதற்கு மட்டும் ஆதாரம் கொடுங்கள் .

    ReplyDelete
    Replies
    1. https://www.facebook.com/photo.php?fbid=1884520945156476&set=p.1884520945156476&type=3&theater

      Delete
    2. அவர் பெயர் எப்படி இருந்தால் என்ன? தமிழர்கள் மதவெறியர்கள் இல்லை! துரோகிகள் ஏதாவது ஒன்றைப்பாவித்து பொதுமக்கள் அண்ணனை வெறுக்க வைப்பதற்கு படாதபாடு படுகிறார்கள்.

      Delete
    3. இல்லை அதற்க்கு பதில் பாஞ்சாலங்குறிச்சி படத்தில் சீமான் என்றே குறிப்பிடபட்டிருக்கும் இது 90களில் எடுக்கபட்ட படம் உண்மை பெயர் சைமன் என்றால் இதில் எப்படி சீமான் என குறிப்பிட்டிருப்பார் ??

      Delete
  8. நன்றி வாழ்த்துகள்

    ReplyDelete
  9. when you are in public life ,you expect these type of rubbish. If you are a tamilian it worse.The article is a factual report.Well done

    ReplyDelete
  10. உலகமே இடிந்து விழுந்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் இருந்தவனை இன்று எந்நேரமும் எம் இனத்தை பற்றியே சிந்திக்க வைத்தவர்கள்
    .
    எம்முயிர் தலைவர் பிரபாகரனும்
    எம்அண்ணன் சீமானுமே.

    ReplyDelete
  11. தங்களுக்கு என்றென்றும் கடமை பட்டுள்ளேன் உறவே

    ReplyDelete
  12. தங்களுக்கு என்றென்றும் கடமை பட்டுள்ளேன் உறவே

    ReplyDelete
  13. உண்மையை தெளிவு செய்தமைக்கு நன்றி

    ReplyDelete
  14. நல்ல விபரமான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  15. நல்ல விபரமான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  16. சீமான் கிறிஸ்தவரா?இல்லையா?
    உடனே தமிழர் என்று கூறக்கூடாது.

    ReplyDelete
  17. சீமான் வீர சைவர்

    ReplyDelete
  18. சீமான் வீர சைவர்

    ReplyDelete
  19. நான் https://www.facebook.com/siripomsindhipom/ இந்த பக்கத்தை தொடங்கி உள்ளேன்... இந்த நீண்ட நெடும் விளக்கத்தை அளித்த அன்பருக்கு என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்...எனினும் ஒரு சிறு வருத்தம் தங்களின் கருத்து இன்னும் வலுப்பெற வேண்டும் என நினைக்கிறேன்...நீங்கள் இன்னும் நிறைய சந்தேகளுக்கும் மற்றும் இது போன்ற ஆதரபூர்வ கருத்துக்களை பதிவிட வேண்டுகிறோம் !!! மிக்க நன்றி

    ReplyDelete
  20. அருமையான பதிவு..நன்றி.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. "பதிலுக்கு பதில் சீமான் தம்பிக்கு" என்ற தலைப்பில் அந்த நபர் ஒரு பதில் கட்டுரையை எழுதியுள்ளார்..நான் அதற்கு "கமென்ட்ஸ்" பக்கத்தில் விளக்கங்களைக் கொடுத்து உள்ளென்.

    வாழ்க தமிழ்நாடு.. தமிழர்

    ReplyDelete
  22. https://faithfulltamailan.blogspot.com/2017/

    ReplyDelete
  23. இந்த விளக்கங்களுக்கு பதிலடி விளக்கங்கள் படித்துவிட்டேன். பிரபாகரனும், கூட இருந்தோரும் உயிரோடு இல்லை, உயிர் பிழைத்தோரும் தன் வாழ்க்கைக்கான தேடலில் இருப்பதால், சிறைகளிலும் உள்ளதால் யாரும் வரமாட்டார்கள் என்ற தைரியத்தில் பேசுகிறார், பேசுவார் உங்கள் அண்ணன். அவர்களில் யாரவது, போரில் இறந்தவருக்கு தெரிந்தவர் யாரவது கூட வந்து சொன்னால் சீமானின் வண்டவாளம் "தண்டவாளம்" ஏறிவிடும். அப்போது பார்க்கலாம் உங்க அண்ணனின் வீர தீரத்தை.

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் விளக்கதிற்கு மிக்க மகிழ்ச்சி.நன்றி.

      Delete

  25. life is about learning by the base of concept we provide studela. for the learning people it is very useful one. In studela we provide a video for maths coaching, science projects,bank exam, IAS exam,TNPSC group exam,RRB exam, other compatative exam, kids learning videos and some technology videos are availabe. watch more videos get your view smart


    ReplyDelete
  26. Iron Chef K9 | titanium teeth k9 - etiology
    Iron Chef K9 is an titanium nitride coating service near me Iron Chef-owned chef from rocket league titanium white Austin, Texas, titanium wedding band sets working with numerous other chefs in a stainless steel vs titanium apple watch larger team than the previous snow peak titanium flask team.

    ReplyDelete